Chennai | ATM | யாருக்கும் சந்தேகமே வராதபடி ரூ.50 லட்சத்தை சுருட்டிய ATM ஊழியர் ஹேய் எப்புட்றா..
ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் மோசடி - வழக்குப்பதிவு
சென்னையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வந்த இவர், 50 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்தது ஆய்வில் தெரியவந்தது. இதனை அவர் ஒப்புக்கொண்ட நிலையில், பணத்தை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மீது பணம் நிரப்பும் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
