சென்னையை பதறவைத்த அசோக் நகர் பயங்கரம்... நிம்மதியாக தூங்கியவர்களை கதறவிட்ட கோரம்

x
  • சென்னையை பதறவைத்த அசோக் நகர் பயங்கரம்... நிம்மதியாக தூங்கியவர்களை கதறவிட்ட கோரம் - நேரில் பார்த்து நடுங்கிய மக்கள்
  • சென்னையில் வீட்டு வாசிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏற்றிய வழக்கில், விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.... மாநகரத்தை உலுக்கிய சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு....
  • சென்னை அசோக் நகர் 10 வது தெருவில் வசித்து வருபவர் சரிதா... இவரது வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறவினர்கள் வந்திருந்தனர்.
  • கொளுத்தும் வெயிலால் தாங்காத வெட்கை, இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால், அவர்கள் வீட்டின் வெளியே சாலை ஓரத்திலேயே படுத்துறங்கினர்.
  • அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, கார் ரூபத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி... மிகவும் இறுக்கமான அந்த முட்டுச் சந்துக்குள், தாறுமாறாக வந்த கார் ஒன்று, படுத்திருந்தவர்களின் கால்களில் ஏறி இறங்கியது.
  • ஒரு கட்டத்திற்கு மேல் காரை நகர்த்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பிடித்து, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • பெண்ணிடம் விசாரணை செய்ததில், அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷாலி என்பதும்,
  • ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் படிக்கும் மகளை அழைத்து வரச் சென்ற போது, கூகுள் மேப்பை நம்பி வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
  • விபத்தில் காயம் அடைந்த ஏழு பேரில், பெரும்பாலானோர் தினக்கூலிகள். எழுந்து நடக்கவே சில மாதங்கள் ஆகலாம் என்பதால், அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
  • அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு உரிய தண்டனை வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்