Chennai | Arrest | போதைப் பொருள் விற்பனை.. இன்ஸ்டா மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை..
சென்னையில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 12 பேர் கைது
சென்னையில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக, ஐடி ஊழியர், மருத்துவக் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டை, மயிலாப்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனைகளில், மலானா பேஸ்ட், ஓஜி கஞ்சா, மெத்தம்பெட்டமைன், போதை மாத்திரைகள் மற்றும் ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவை புத்தாண்டையொட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததும், இன்ஸ்டாகிராம், செயலிகள் மூலம் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது.
Next Story
