"திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணா" - சுப வீரபாண்டியன் தகவல்

இந்திய நாடாளுமன்றத்தில் திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணாத்துரை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறினார்.
"திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணா" - சுப வீரபாண்டியன் தகவல்
Published on

இந்திய நாடாளுமன்றத்தில் திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணாத்துரை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறினார். சமீபத்தில் வெளியான, அறிஞர் அண்ணா குறித்த நூல் திறனாய்வு கூட்டத்தில் பேசிய அவர், தமிழக இளைஞர்கள் அனைவரின் தாழ்வு மனப்பான்மை நீங்க செழுமையான தமிழ் நடையை அண்ணா கொண்டு வந்தார் என்று கூறினார். திராவிட நாடு கொள்கை என்பது பல மாநிலங்களின் கூட்டாட்சி உரிமை என கூறியவர் அண்ணா என்றும் சுபவீரபாண்டியன் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன், திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com