சென்னையில் வடமாநில தொழிலாளியை ரோட்டில் ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கிய சிறுவன் - வைரலாகும் வீடியோ

x

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே வடமாநிலத்தவரை கடுமையாக தாக்கி, செல்போன் பறிக்க முயன்ற 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொழிற்பேட்டை அருகே நடந்து சென்ற வடமாநிலத்தவரை விரட்டி விரட்டி தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறையினர், கைதான அம்பத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சச்சின், ஜோயல் திருமங்கலத்தை சேர்ந்த சத்யா ஆகிய 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர் சுனில், கீழ்ப்பாக்கம் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்