பயங்கர சத்தத்துடன் நொறுங்கிய கண்ணாடி..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை உள்நாட்டு முனையத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான முனையங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாறி மாறி கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதியில் 4வது கேட்டில் உள்ள சுமார் 7 அடி உயரம் உடைய கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. ஆனால் சிதறி கீழே விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே, அனைத்து கண்ணாடி கதவுகளையும் உரிய ஆய்வு நடத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com