சென்னை ஏர்போர்ட்.. கேட்பாரற்று ரூ 1.3 கோடி மதிப்பிலான பொருட்கள் - அதிகாரிகள் அதிரடி முடிவு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சுமார் 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம், தடை செய்யப்பட்ட சக்திவாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் நட்சத்திர ஆமைகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இந்தப் பொருட்களைக் கடத்தி வந்தவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் மீனம்பாக்கம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
