

டெல்லிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பவுசல் கரீம் மற்றும் சையத் அஜீஸ் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், இருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 210 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த வந்த முகமது ஹக்கீம் மற்றும் பீர் மைதீன் ஆகியோரிடம் இருந்து 14 லட்சம் மதிப்பிலான் யூரோ கரன்சிகளையும் கைப்பற்றினர். பின்னர், 4 பேரை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.