சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் இளம் காவலர் தற்கொலை

சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் இளம் காவலர் தற்கொலை
Published on

சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​​திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற காவலருக்கு வயது 26. இன்று தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய அவர், அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். காவலர் மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. எதற்காக, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com