Chennai ||CM விஜய்யை சந்தித்த நடிகை வரலட்சுமி நெகிழ்ச்சி பதிவு

Chennai ||CM விஜய்யை சந்தித்த நடிகை வரலட்சுமி நெகிழ்ச்சி பதிவு விமர்சிப்பது எளிது, ஆனால் முதல் முயற்சியிலேயே வெல்வது அசாத்தியம் என முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த பிறகு நடிகை வரலட்சுமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்... நடிகை வரலட்சுமி சரத்குமார், தமிழக முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்து பேசினார்... இந்தச் சந்திப்பில் பெண்களின் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து முதலமைச்சருடன் விவாதித்ததாக கூறியுள்ளார்...மேலும் விஜய்யுடன் இணைந்து தான் நடித்த 'சர்க்கார்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த உரையாடல்களை நினைவுகூர்ந்த அவர், அன்றே விஜய்யின் அரசியல் பயணம் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்... அதன் பின்னர் சமூக வலைதளப் பக்கத்தில் தாம் ஒரு 'விஜய் வெறியன்' என்றும் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com