பேத்தியை பார்க்க வந்த பாட்டிக்கு நடந்த கோரம்"துடிக்க.. துடிக்க" கதறிய மகன்

x

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பேருந்தில் அடிபட்டு 50 வயது பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் ராஜீவ்காந்தி அரசு

மருத்துவமனையில் உள்ள தனது பேத்திக்கு உணவு கொடுத்து விட்டு பிராட்வே பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது திருவேற்காடு செல்லும் பேருந்து, ஓட்டுநரின் கவனக்குறைவால் மூதாட்டியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாளை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் தணிகை மலையை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்