Chennai | ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து - மேலும் ஒருவர் பலி
Chennai | ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி 3 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து - மேலும் ஒருவர் பலி சென்னை மூலகொத்தளம் அருகே கடந்த வாரம் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், பலி எண்ணிக்கை தற்போது மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கோயம்பேட்டைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த லாரி, பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் முரளிதரன், கௌதமன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இடுப்புக்குக் கீழே பலத்த காயமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி என்ற பெண், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் தப்பிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
