Chennai | அட்ரஸ் கொடுத்து விட்டு சென்ற இளைஞர் - வீடு புகுந்து வெட்டிய சரமாரியாக ரவுடி கும்பல்..
சென்னையில் ஹெல்மெட் அணிந்து வந்து வீடுபுகுந்து கல்லூரி மாணவர்களை ரவுடி கும்பல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஆதி, அபினேஷ் ஒரே கல்லூரியில் பயின்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அபினேஷ் தனியாக நடந்து சென்றபோது, அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவன் தன்னுடன் தான் இருக்கிறான், முடிந்ததை செய்யுங்கள் என தனது வீட்டு முகவரியை சொல்லி அபினேஷை ஆதி அழைத்து சென்றுள்ளார். வன்மத்தில் இருந்த கும்பல், செவ்வாய் இரவு ஹெல்மெட், முகக்கவசம் அணிந்தபடி ஆதி வீட்டிற்கு நுழைந்து, ஆதி, அபினேஷ், அவரது நண்பர் அப்துல்லாவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்து பயத்தில் வீட்டில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் தப்பியோட, காயமடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆதி தரப்பு அளித்த புகாரின்பேரில் தப்பி ஓடிய ரவுடி சிலம்பரசன், சூர்யா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
