"அரசு நிலத்தை ஆக்கிரமித்த அரசு ஊழியர்" - ஒன்று கூடிய பொதுமக்கள்.. கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

• செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் நத்தம் புறம்போக்கு இடத்தை நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம் செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை சுரேஷ் ராஜா என்பவர் இலவச வீட்டு மனை பட்டா என்கிற பெயரில் மோசடியாக பெயர் மாற்றம் செய்து ஆக்கிரமித்துள்ளதாக 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவள்ளுவர் நூலகம் மற்றும் கோவில் தேர் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தை சுரேஷ்ராஜா ஆக்கிரமித்துள்ளதாகவும் கிராமமக்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com