Chengalpattu | TASMAC | என்னது "ஓசி"யில் மது தரமாட்டியா... டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரத்த காயம்...
செங்கல்பட்டு அருகே ஓசியில் மதுபானம் தராத டாஸ்மாக் ஊழியர்கள் மீது ரவுடிகள் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த ரவுடிகள் அருள், பார்த்திபன் ஆகியோர், ஓசியில் மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளனர். மறுப்பு தெரிவித்த ஊழியர்கள் சரவணன், மனோகரன் மற்றும் அன்பழகன் மீது பீர் பாட்டிலால் தாக்கியதில், காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
