Chengalpattu | மாணவி உயிரிழப்பு பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

மாணவி உயிரிழப்பு- பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல் செங்கல்பட்டு அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த மாணவி, 4 மாத கர்ப்பமாக இருப்பதாக பிரேத பரிசோதனையில் தகவல் வந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பதினோராம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவிக்கு மஞ்சள்காமாலை வந்ததை அடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து, அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மாணவியின் பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com