Chengalpattu | படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் - பேருந்து சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி

Chengalpattu | படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் - பேருந்து சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி

Chengalpattu | படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் - பேருந்து சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி மாமல்லபுரம் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர், தவறி விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகடம்பாடி பகுதியைச் சேர்ந்த தீனா என்ற மாணவர், பேருந்துக்குள் இடமில்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி சாலையில் விழுந்த நிலையில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி அவரது கால் துண்டானது. உடனடியாக பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அம்மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com