Chengalpattu | கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய்க்குட்டியை மீட்க சென்றபோது வெளியே வந்த பழங்கால ஆபத்து

Chengalpattu | கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய்க்குட்டியை மீட்க சென்றபோது வெளியே வந்த பழங்கால ஆபத்து

கிணற்றுக்குள் இருந்த பழங்கால வெடிகுண்டை கண்டெடுத்த இளைஞர்கள் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, பாழடைந்த கிணற்றுக்குள் இருந்த பழங்கால ஆபத்தான வெடிகுண்டை இளைஞர்கள் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தையூர் ஊராட்சி பெரிய பிள்ளேரி பகுதியில், கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய்க்குட்டியை மீட்க இளைஞர்கள் இறங்கியுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் என்ற இளைஞர், கிணற்றுக்குள் கிடந்த மர்ம பொருளை வெளியே எடுத்துள்ளார். அது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட, மிகவும் ஆபத்தான 'மோட்டார் ஷெல்' வகை வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் வந்து, இந்த குண்டை பாதுகாப்பாக மீட்டு செயலிழக்கச் செய்ய உள்ளனர். இந்த பழங்கால குண்டு கிணற்றுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com