Chengalpattu Protest | 5வது நாளாக தொடரும் செவிலியர்களின் போராட்டம் | வெளியான முக்கிய தகவல்
2வது முறையாக பேச்சுவார்த்தை தோல்வி - செவிலியர்கள் தொடர் போராட்டம்
செங்கல்பட்டு: செவிலியர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் 2வது முறையாக செவிலியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற வந்த செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் இரண்டாவது முறையாக செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்...
ஒலிபெருக்கி அமைத்து 500-க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி வருவதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்..
கடந்த 5-நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்....
செவிலியர் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
