செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், காஞ்சிபுரத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு 37வது மாவட்டமாக நாளை துவங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில், பிரமாண்ட மேடை, பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட், ஜல்லி கலவைகள் பரப்பப்படுகின்றன. பிரமாண்ட முகப்பு, பேனர், விளம்பர தட்டிகள், புதிய மாவட்ட நிர்வாகத்தின் அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறுகிறது.