செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம்

தமிழகத்தின் 37வது மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம்
Published on
தமிழகத்தின் 37வது மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகின்றன. இதற்கான விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று மதியம் 12.15 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com