கேப் விடாமல் வந்த பைக்குகள்.. வழியை மாற்றி டிராபிக்கை குறைத்த காவல் துறை

கேப் விடாமல் வந்த பைக்குகள்.. வழியை மாற்றி டிராபிக்கை குறைத்த காவல் துறை

சென்னை நோக்கி இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வருவதால், பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தனி பாதை அமைத்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

தீபாவளி பண்டிகை முடிந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதிகளைச் சார்ந்த ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சாரை சாரையாக இருசக்கர வாகனங்கள் சென்னை நோக்கி செல்கின்றன. இதனால், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இருசக்கர வாகனங்களுக்காக தனியாக பாதை அமைத்த போலீசார், போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். தனி வழி அமைத்த‌தால், போக்குவரத்து நெரிசலில் நிற்காமல் செல்ல முடிவதாக இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒருசிலர், ஹெல்மெட் அணியாமல் அபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். 

X

Thanthi TV
www.thanthitv.com