கணவனை பிரிந்து இரண்டாம் திருமணம், சொந்த மனைவியையே கடத்தி கூட்டு பாலியல்..கணவனை பழிவாங்க பறந்த புகார்

கணவனை பிரிந்து இரண்டாம் திருமணம், சொந்த மனைவியையே கடத்தி கூட்டு பாலியல்..கணவனை பழிவாங்க பறந்த புகார்
Published on

கணவனை பிரிந்து இரண்டாம் திருமணம்

சொந்த மனைவியையே கடத்தி கூட்டு பாலியல்

கணவனை பழிவாங்க பறந்த புகார்

வட மாநில பெண்ணின் புகாரால் அதிர்ந்த காவல்நிலையம்

தன்னை, நான்கு பேருடன் சேர்ந்து கணவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்த பெண், சிறிது நேரத்திலேயே புகாரை வாபஸ் பெற்று சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகவை சேர்ந்த பர்வேஜ் மியா என்பவர், திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். பர்வேஜ் மியா மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் அவரை பிரிந்த மனைவி தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பர்வேஜ் மியா அழைத்தன் பேரில் சென்ற தன்னை, கணவர் கடத்திச் சென்று 4 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை கேளம்பாக்கம் போலீசில் பெண் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கிய நிலையில், திடீரென காவல்நிலையம் வந்த அந்த அப்பெண் புகாரை திரும்ப பெற்று இருக்கிறார். கணவனை பயமுறுத்துவதற்கும், பழிவாங்கும் நோக்கிலும் புகார் அளித்ததாகவும் அப்பெண் கூறிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com