"ரேட் செம்ம கம்மியா இருக்குப்பா.." - உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

நெல்லை மாவட்டத்தில், காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள், திசையன்விளை காவல் நிலையத்தில் ஏலம் விடப்பட்டன. இரண்டு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கரவாகனங்கள் என மொத்தம் 138 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. மொத்த வாகனங்களும் சேர்த்து, 18 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதில், வியாபாரிகள், மெக்கானிக்குகள், பொதுமக்கள் ஆகியோர் போட்டி போட்டு ஏலம் எடுத்து, உடனடியாக தொகையை செலுத்தி வாகனங்களைப் பெற்றுச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com