துரத்தி துரத்தி வெட்டிய நபர்.. ரத்தம் சொட்ட துடிதுடித்து பலியான கறிக்கடைக்காரர் - கீழே விழுந்து கதறும் குடும்பத்தினர்

x

ஈரோடு மாவட்டத்தில் இறைச்சி வியாபாரியை முன்பகை காரணமாக துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கும், பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளயங்கிரிக்கும் முன்பகை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் வெள்ளயங்கிரி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து முருகேசனை துரத்தி சென்று தலை மற்றும் தோள் பட்டையில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு வெட்டிய அரிவாளோடு வெள்ளயங்கிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்