சிறுவர்களுடன் உணவருந்தி உரையாடிய அறந்தாங்கி போலீஸ்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வாராப்பூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் பிரியதர்ஷன், கதிரவன், சுதர்சன் ஆகிய நால்வரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் சாலையில் நடந்து சென்றபோது, 5,000 ரூபாய் பணம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை எடுத்த சிறுவர்கள் அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து சிறுவர்களின் நேர்மையை பாராட்டிய காவலர்கள் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கிக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
