சென்னை குளத்தை தூர்வாரும் பொதுமக்கள் : மாநகராட்சி நிர்வாகம் தடுப்பதாக குற்றச்சாட்டு

சென்னை, ஆவடி அருகே உள்ள கவரப்பாளையம் குளத்தை பொதுமக்களே தூர்வாரி வருகின்றனர்.
சென்னை குளத்தை தூர்வாரும் பொதுமக்கள் : மாநகராட்சி நிர்வாகம் தடுப்பதாக குற்றச்சாட்டு
Published on
சென்னை, ஆவடி அருகே உள்ள கவரப்பாளையம் குளத்தை பொதுமக்களே தூர்வாரி வருகின்றனர். 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கவரப்பாளையம் குளம், அப்பகுதியில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கோடையின் தாக்கம் காரணமாக குளம் வறண்டு போய் உள்ள நிலையில், அதனை தூர்வார பொதுமக்கள் ஆவடி மாநகராட்சியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்களே ஒன்று சேர்ந்து கவரப்பாளையம் குளத்தை கடந்த ஒரு மாதகாலமாக தூர்வாரி வருகின்றனர். பொதுமக்கள் செய்துவரும் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com