Neet Student Missing || மாறிய கையெழுத்து.. மாயமான நீட்தேர்வு எழுதிய மாணவர்..! சேலத்தில் அதிர்ச்சி
சேலத்தில் நீட்தேர்வு எழுதிய மாணவர் காணாமல் போனதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சூரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவர் குருமூர்த்தி, நீட்தேர்வு நுழைவுசீட்டில் கையெழுத்து மாறியிருந்ததால், ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு எழுத வைக்கப்பட்டிருக்கிறார். இதனால் சரிவர தேர்வு எழுத முடியாமல் போனதால், மன உளைச்சலில் இருந்த மாணவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். எனவே மாணவனின் மருத்துவக் கணவை பாழாக்கிய நீட் பயிற்சி மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Next Story
