TNPSC தேர்வு விதிகள் மாற்றம் | ஐகோர்ட் அதிரடி உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 5 ஏ தேர்வு விதிகளில் மாற்றம் தொடர்பான மனுவுக்கு தேர்வு தொடர்பான ஆவணங்களை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமதுசுல்தான் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5 ஏ பணியிடங்களுக்கான தேர்வை எழுதியுள்ளார். பின்னர், விதிகளின்படி உதவி அலுவலர் பணிக்கு அவருக்கு தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, கடந்த மே மாதம் 26ம் தேதி தேர்வு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தேர்வுக்கு தொடர்பான ஆவணங்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்ய நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.
Next Story
