சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை ஓட்டி மத்திய அரசு சார்பில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், ப்ளாஷ் மாப் (FLASHMOB) நிகழ்ச்சி நடைபெற்றது. மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடன கலைஞர்கள் நாட்டுப்பற்று மிக்க பாடலுக்கு நடனமாடினர். மேலும் சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது முதல் நிலவில் தரையிறங்கியது வரையிலான நிகழ்வுகளை, தத்ரூபமாக செய்து காட்டினர். இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.