தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Published on
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, தென்காசி, தேனி,திண்டுக்கல், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com