அரசு பணிக்கான தேர்வில் தில்லுமுல்லு - கோவையில் 8 வடமாநில நபர்கள் கைது
கோவையில் மத்திய அரசின் வனத்துறை பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 8 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்களின் கைரேகையும், நேர்முகத் தேர்விற்கு வந்தவர்களின் கைரேகையிலும் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் உத்திரபிரதேசம் , ராஜஸ்தான், பீகார், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த 8 பேரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்துள்ளனர்.
