மத்திய பல்கலைகழக மாணவி விடுதியில் தற்கொலை - உறவினர்கள் போராட்டம்

திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைகழக மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த உறவினர்கள் உடலை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி சோபியா, விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், உறவினர்கள் பல்கலைக்கழக வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com