மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
Published on

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த விருதை பெற காரணமான அவரது அளப்பறிய தமிழ் தொண்டையும், கலை பயணத்தை பற்றியும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இப்படி தமது வசீகர பேச்சால், மக்களை கவர்ந்தவர் சாலமன் பாப்பையா. 84 வயதான பாப்பையா பிப்ரவரி 22, 1936ல் மதுரையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மதுரையில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்த அவர்,

அமெரிக்கன் கல்லூரியில், இளநிலை தமிழ் பட்டபடிப்பை முடித்து, பின்னர் தியாகராசர் கல்லூரியில் முதுநிலை பட்டபடிப்பை முடித்தார்.

வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் தமிழாசிரியராக பணி புரிந்த பாப்பையா, பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக உயர்ந்தார். இதையடுக்கு1993 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின், சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை, தமக்கு உரிய நகைச்சுவை நடையில், பட்டிமன்றங்களை நடத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சாலமன் பாப்பையா.

தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ள நிலையில், ரஜினி படத்தில் வரும் அங்கவை சங்கவை காட்சி இன்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத காட்சி.

தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு,72 வது குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தனது தமிழ் தொண்டால், கடந்த 2010 அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முத்தமிழ் பேரறிஞர் விருதை சாலமன்பாப்பையாவிற்கு வழங்கியது. 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி ஆகிய விருதுகள் பாப்பையா பெற்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com