Central Government Fund Release | தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்த தொகை எவ்வளவு? வெளியான விவரம்

x

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்த நிதி.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு, தமிழகத்திற்கு 538 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.2024-25-ம் ஆண்டுக்கு, திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 604 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டு,அதில் மத்திய அரசின் பங்கான 362 கோடியே 81 லட்சம் ரூபாய் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.2025-26 ம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் 585 கோடியே 31 லட்சம் ரூபாயில்,மத்திய அரசின் பங்கு 351 கோடியே 18 லட்சம் ரூபாயாகும்.இதில் 50 விழுக்காடு தொகையாக 175 கோடியே 59 லட்சம் ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஆக மொத்தத்தில் 538 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்