சென்ட்ரல், எழும்பூர் தட்டி தூக்கி டாப்புக்கு வந்த தாம்பரம் ரயில் நிலையம்
தாம்பரம் ரயில் நிலையம், இந்தாண்டு 3 கோடியே 41 லட்சத்து பயணிகள் பயன்படுத்தும் ரயில் நிலையமாக
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களை தாம்பரம் ரயில் நிலையம் பின்னுக்கு தள்ளியது. இருப்பினும் NSG-1 என்ற வகைக்கு ஏற்ப உயர்தர நடைமேடைகள், R.O குடிநீர், லிப்ட், எஸ்கலேட்டர், பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
