மத்திய அரசின் அறிவுறுத்தல் "தமிழகத்திற்கு பொருந்தாது"

மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையம் நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு ,மொத்த தண்ணீர் சப்ளைகள் மற்றும் வீட்டிற்கு பயன்பாடு உள்ளிட்ட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களுக்கு...
x

மத்திய அரசின் அறிவுறுத்தல் - "தமிழகத்திற்கு பொருந்தாது"

மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையம் நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு ,மொத்த தண்ணீர் சப்ளைகள் மற்றும் வீட்டிற்கு பயன்பாடு உள்ளிட்ட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களுக்கு உரிய கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி என்ஓசி பெறாமல் நிலத்தடி நீரை தொடர்ந்து எடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, சட்டத்திற்குப் புறம்பாகவும் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அது தமிழ்நாட்டிற்கு பொருந்துமா என கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது அதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது.

அதன் படி, அந்த அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்