Census of India | மக்கள் தொகை கணக்கெடுப்பு - முழுவீச்சில் தொடங்கிய பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முழுவீச்சில் தொடங்கிய பணிகள்

Census of India | மக்கள் தொகை கணக்கெடுப்பு - முழுவீச்சில் தொடங்கிய பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதற்கட்ட பணிகள் தொடக்கம் இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான 'வீடு கணக்கெடுப்பு மற்றும் வீட்டு வசதி' பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை பதிவு செய்துள்ள 82 குடும்பங்களுக்கு சுய-கணக்கீட்டு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அந்த எண்ணை மட்டும் காண்பித்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் 15 நாள் சுயவிவர பதிவு காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகளை தொடங்கியுள்ளனர். அதன்படி, வீட்டின் வசதிகள், குடிநீர், கழிப்பறை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேகலாயா, ஜார்கண்ட் மாநிலங்களில் சுயவிவர பதிவு தொடங்கியதை அடுத்து, மே 30க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கீடு மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com