சிமெண்ட் ஆலை முற்றுகை - போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்

x

அரியலூர் அருகே ஓட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆலை பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பல தரப்பினருக்கும் குலதெய்வமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆலையின் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கோயில் பகுதியை அசுத்தமாக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஏற்கனவே உறுதியளித்தபடி, ஆலை நிர்வாகம் கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரவில்லை என ஆத்திமடைந்த பொதுமக்கள், ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, தொழிலாளர்கள் எங்கும் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்