இளைஞர்களை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி - கஞ்சா வாங்குவதற்காக திருட்டு முயற்சி

சென்னை பல்லாவரத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர்.
இளைஞர்களை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி - கஞ்சா வாங்குவதற்காக திருட்டு முயற்சி
Published on

சென்னை பல்லாவரத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் மனோஜ் என்பவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நாகல்கேனியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்ததில், கஞ்சா வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதால், செல்போன் பறிப்பில் ஈடுபட முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com