திருச்செந்தூரில் சரிந்து விழுந்த செல்போன் டவர்
சூறை காற்றில் சரிந்து விழுந்த தனியார் செல்போன் டவர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே இருந்த தனியார் செல்போன் டவர் சூறைக்காற்றில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தாலுகா ஆபீஸ் சாலையில் உள்ள பகுதிகளில் மின் பராமாரிப்பு பணியின் காரணமாக ஒரு சில நாட்களாக மின் இணைப்பானது துண்டிக்கப்பட்டது . அதனால் தற்போது அந்தப் பகுதியில் தனியார் தொலைபேசி டவர் விழுந்ததால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு செல்போன் டவரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
