சென்னையில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் திருட்டு - ஒருவருக்கு மாவுக்கட்டு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவர் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிப்பின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து செல்போனை பறித்துச்சென்ற நபர் ஆசிப் அலியிடம்10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போனை திருப்பி தருவதாகக் கூறியதை நம்பி ஆசிப் அலி அந்த நபரிடம் பணம் கொடுத்து போனை வாங்கியுள்ளார். செல்போன் பறிப்பு குறித்து ஏற்கெனவே ஆசிப் அலி போலீசில் புகாரளித்த நிலையில், புகாரின் பேரில் டில்லிபாபுவை கைது செய்த போலீசார் அவரது கையில் மாவுக்கட்டு போட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com