Isha Yoga | Yoga Day | ஈஷா மையத்தில் யோகா தின விழா... 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை வீரர்கள் பங்கேற்பு
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, கோவை ஆதியோகி வளாகத்தில், யோகா தினத்தை ஒட்டி பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வெள்ளலூர் அதிவிரைவு படை வீரர்கள், மதுக்கரை 35வது ரெஜிமெண்ட் மற்றும் சூலூர் 43வது ரெஜிமெண்டை சேர்ந்த வீரர்கள் என 200க்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் சில தனியார் நிறுவனங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து, தமிழகத்தில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், புதுவை, திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன... இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இலவசமாக வழங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில், சத்குருவால் வடிவமைக்கப்பட்ட எளிய, சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
Next Story
