CCTV | Metro | மெட்ரோ பணிக்கான பொருள் திருட்டு.. காட்டி கொடுத்த சிசிடிவி
இரும்பு கம்பிகள் திருட்டு - ஒரு மணிநேரத்தில் குற்றவாளிகள் கைது சென்னை மாதவரம் ரெட்டேரி பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கிலோ எடையுள்ள 30 இரும்புக் கம்பிகளை, மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்றனர். இதனைப் பார்த்த காவலாளி அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட மாதவரம் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புகாரளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்தில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கௌதம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 75 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன...
மெட்ரோ பணிக்கான பொருள் திருட்டு.. காட்டி கொடுத்த சிசிடிவி
