செல்போன்களை அசால்ட்டாக திருடும் CCTV - காட்சி
கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு - இருவர் கைது
சென்னை கொடுங்கையூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடி சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். இந்தக் கடையில் கடந்த 13ம் தேதி,15 விலை உயர்ந்த செல்போன்கள், 2 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் தண்டையார்பேட்டை மற்றும் மீஞ்சூர் பகுதிகளை சேர்ந்த இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு - இருவர் கைது
Next Story
