நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக ரயில்பெட்டியில் சிக்கிய அவரை அங்கு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சுமன், விரைவாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து காப்பாற்றினார்.