அத்திக்கடவு அவினாசி பைப் உடைந்து பீறிட்டு வெளியேறும் பல லட்சம் லிட்டர் நீர்

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் வழியாக இன்று அதிகாலையில் லாரி ஒன்று சென்றுள்ளது. லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையோரம் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்ட பைப் லைனில் லாரியை மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அத்திக்கடவு அவிநாசி திட்ட பைப்பிலிருந்து பல லட்சம் லிட்டர் நீரானது வேகமாக வெளியேறி வருகிறது. அதிகாலையில் இந்த நடந்த இந்த விபத்தினால் அந்த பகுதி முழுவதுமே நீரால் சூழப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்து நடந்த இடம் மேடான பகுதி என்பதால் பள்ளமான இடங்களில் உள்ள குட்டைகளுக்கு இந்த நீர் சென்று வருவதால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, இந்நிலையில் அதிகாலையில் லாரி அத்திக்கடவு அவினாசி பைப் லைனில் மோதி விபத்தை ஏற்படுத்தும் பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அத்திக்கடவு அவிநாசி திட்ட பணியாளர்கள் தண்ணீரை வெளியேறுவதை நிறுத்தி குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்