House Sale | ``வீட்ட எனக்கே விலைக்கு தர மாட்டீங்களா?’’ - சில்லு சில்லாய் நொறுக்கிய பெண்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வீட்டின் மதில் சுவரை பெண் ஒருவர் இடித்து தள்ளிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சித்திரங்கோடு பகுதியை சேர்ந்த அகஸ்டின் ஜெயகுமார் என்பவருக்கு மேக்கோடு கிராமத்தில் 11 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த மரியம்மா என்பவர் விலைக்கு கேட்டதற்கு, அகஸ்டின் ஜெயகுமார் மறுத்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டிருந்ததால், அதிர்ச்சி அடைந்த அவர், சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த ரவி, ரமேஷ் ஆகியோரை கைது செய்து, தலைமறைவான மரியம்மாவை தேடி வருகின்றனர்.
Next Story
