செங்கல்பட்டில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை மர்ம நபர்கள் லாரியில் திருடிச் ​செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

x

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் திருட்டு

செங்கல்பட்டில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை லாரியில் திருடிச்செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஈச்சர் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லும் சிசிடிவி காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மார்க்கெட், அனுமந்தபுத்தேரி, பழைய ஜிஎஸ்டி ரோடு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் வீட்டு வாசலில் படுத்திருக்கும் மாடுகள், சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் என மொத்தம் 25 மாடுகளுக்கு மேல் திருடுபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் உமாபதி, ராஜேந்திரன், வெங்கட், சத்யா, அருண், சந்தியா, சுரேஷ், மாலா, கமல், வெங்கட் உள்ளிட்ட பலருடைய மாடுகள் திருடுபோயுள்ளது. ஈச்சர் சரக்கு வாகனத்தில் நான்கைந்து பேர் கொண்ட கும்பல் சர்வசாதாரணமாக லாரியில் மாடுகளை தூக்கிப்போட்டு திருடிச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வராததால் மாடுகளை தேடும்போது தான் மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் திருடும் சிசிடிவி பதிவுகள் கிடைத்தது. இதனை அறிந்ததும் பலபேர் எங்களது மாடுகளை காணவில்லை என காவல் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். மாடுகள் களவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மாடு திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒவ்வொரு மாட்டின் விலையும் 40 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை என மொத்தம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பசுமாடுகள் என தெரிவிக்கின்றனர். இரண்டு மூன்று நாட்களில் 25 மாடுகள் களவுபோன சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்