"சி.பி.எஸ்.இ. பள்ளி என்று அதிக கட்டணம் வசூல்" - சீனிவாசன், பெற்றோர்

அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி பெற்றோர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பனை சந்தித்து இன்று முறையிட்டனர். மெட்ரிக்குலேஷன் பள்ளியை நடத்தி கொண்டு, சிபிஎஸ்இ பள்ளிக்கு அங்கீகாரம் வாங்கி இருப்பதாக கூறியும் பல மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக, பெற்றோர் புகார் அளித்தனர்.இந்த விவகாரம் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கூறும்போது, உரிய அங்கீகாரமின்றி பள்ளிகளை நடத்துவதோ, அல்லது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ மிகப்பெரிய தவறு , இதுபோன்று விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com